இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன், இந்தியா நமது நெருங்கிய அண்டை நாடு. அது அமெரிக்கா, ரஷ்யா அல்லது சீனா அல்ல எனவும், இலங்கை செய்ய வேண்டியது இந்த உறவை சிறப்பாகப் பயன்படுத்துவதாகும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
பொருளாதார நெருக்கடியின் போது, 4.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்காவிட்டால் எமது நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார்.
இந்தியாவின் அதானி குழுமத்தின் முதலீட்டு முயற்சி இலங்கைக்கு மேலும் பல முதலீடுகளை கொண்டு வந்ததாகவும், ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், இந்தப் பாதையை பயன்படுத்தி முன்னேறுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
Link : https://namathulk.com