இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று (26) இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பில் பங்கேற்பதற்காகத் தமிழக மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐவர் நேற்று (25) இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அந்த சங்கத்தின் மற்றுமொரு பிரதிநிதி முன்னதாக இலங்கைக்கு வந்துள்ள நிலையில் இன்றைய சந்திப்பில் மொத்தமாக இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் 6 பேர் பங்கேற்கவுள்ளனர்.
அதேநேரம், வட மாகாணத்தில் உள்ள மீனவ சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 பேர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சந்திப்பு வவுனியாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
Link : https://namathulk.com