நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
நுவரெலியா தபால் நிலையத்தை தபால் துறையிலிருந்து நீக்கிய பின்னர், அதை விற்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டிருந்ததாக அமைச்சர் கூறினார்.
அத்துடன், சுற்றுலா தலமாக அந்த இடத்தை மேம்படுத்தும் அதேவேளையில், தபால் நிலையத்தை திணைக்களத்தின் கீழ் வைத்திருப்பதற்கு ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வருவதாகவும், திருத்தப்பட்ட முடிவை அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அறிவிக்காது என்று அமைச்சர் கூறினார்.
Link : https://namathulk.com