யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
கொக்குவில் பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் சிலர் ஈடுபடுவதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை பொலிசார் முற்றுகையிட்டனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 300 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com