யாழ் திருநெல்வேலி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.பல்கலைக்கழக
இணைந்த சுகாதார பீட மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வுக்கோரி யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகியது.
இதனை தொடர்ந்து திருநெல்வேலி நகரை நோக்கி ஆர்ப்பாட்டகாரர்கள் பேரணியாக சென்ற போது , பொலிசாரால் இடை மறிக்கப்பட்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது என பொலிசாரால் அறிவிக்கப்பட்டது.
இதன்போது கொக்குவிலில் இருந்து திருநெல்வேலி நகருக்கு செல்லும் ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பொலிசாரின் அறிவித்தலின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட வளாகத்தை சென்றடைந்தனர்.
Link : https://namathulk.com