அனுராதப்புரம், எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடாலயத்தில் வசித்து வந்த 69 வயது பிக்குவே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பிக்குவிற்கு முச்சக்கர வண்டி மற்றும் சாரதி ஒருவர் இருப்பதும் தெரியவந்த நிலையில், குறித்த சாரதி தற்போது மடாலயத்தில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டி சாரதி பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொலையை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிசார் மேலும் கூறினர்.
சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று ஜோடி காலணிகள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை மேலதிக விசாரணைக்காக பொலிஸார் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com