இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போக்கு அதிகரித்துள்ளதோடு, கடந்த காலங்களில் இது தொடர்பான உயிரிழப்பு மற்றும் ஏனைய விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை பொலிஸ் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைவாக, வாகனம் செலுத்திய வெளிநாட்டு பிரஜைகளுக்கு முச்சக்கரவண்டி செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் பயிற்சியின்மையே விபத்துக்களுக்குக் காரணம் என தெரியவந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பபட்டுள்ளது.
ஒரு வெளிநாட்டவருக்கு நாட்டில் வாகனம் செலுத்துவதற்கு பின்வரும் நிபந்தனைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உரிமங்கள் தேவை என அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
- செல்லுபடியாகும் உள்ளூர் சாரதி அனுமதி பத்திரம்.
- நாட்டிற்குள் செல்லுபடியாகும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரம்.
- வெளிநாட்டு பிரஜையின் நாட்டிலுள்ள சாராதி அனுமதி பத்திரம்.
Link: https://namathulk.com