யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் தனது உடம்பில் அதிகமாக ஏற்றிக்கொண்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது இனைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நீண்ட கலமாக போதைப் பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிகமாக போதைப் பொருளை பாவித்த நிலையில் மயக்கமுற்ற நிலையில் சிகிச்சைக்காக குறித்த இளைஞன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Link : https://namathulk.com