பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்கிற்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.
பப்புவா நியூ கினியாவில் சுமார் 20 இலட்சம் மக்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
சுமார் 13 இலட்சம் மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையே, பேஸ்புக் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
இதனால் பேஸ்புக்குக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், பப்புவா நியூ கினிவாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
Link: https://namathulk.com