ஐபிஎல் தொடரை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 31ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா தொடர்வதற்கு பிசிசிஐ அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து மற்றும் அவுஸ்;திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதையடுத்து அவர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் நீடிக்கமாட்டார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவர் மீண்டும் அணிக்கு தலைமை தாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com