எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு ஏப்ரல் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட நாட்களில் தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்கள், ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
Link : https://namathulk.com