கோபாய் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் காணிகளை இராணுவம் இன்னும் விடுவிக்காத நிலையில் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அத்தகைய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ் சாட்டினார்.
கோபாய் பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கோப்பாய் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
இதன்போது, கோப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள தனியார் காணிகள் பல ஏக்கர் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய தகவல்கள் அபிவிருத்தி கலந்துரையாடலில் திட்டமிட்ட முறையில் மறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்தேகம் வெளியிட்டள்ளார்.
ஆகவே, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி கூறியுள்ள நிலையில் இராணுவம் பயன்படுத்தும் தனியார் காணிகளை விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Link : https://namathulk.com