பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கிரிஷ் செயற்றிட்ட வழக்கில் இருந்து விலகுவதாக கொழும்பு மேல் நீதிமன்ற நிதிபதிகளான மஞ்சுள திலகரத்ன மற்றும் சுஜீவ நிஸ்ஸங்க ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோர் அண்மையில், பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கைகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
எனவே, இந்த வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, மே 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Link : https://namathulk.com