செங்கடலில் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹுர்காடா கடற்கரையில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக இவர்கள் சென்றுள்ளனர்.
இந்த விபத்தில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பயணிகளில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Link: https://namathulk.com