தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Aarani Editor
1 Min Read
தென் கொரியா

தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தென் கொரியாவில் காட்டுத்தீ பரவிவரும் நிலையில் அப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கையர்களை கேட்டுக்கொள்வதாக கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாக எந்த தகவலும் பதிவாகவில்லை எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தென் கொரியாவில் உள்ள இலங்கையர்கள் 2 735 2966, 2 735 2967 அல்லது 2 794 2968 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *