பிரித்தானிய அரசாங்கத்தால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டவரான முன்னாள் கடற்படைத் தளபதி, கடற்படை அட்மிரல் வசந்த கரன்னாகொட அந்த தடைகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைகளானது, நீதியைப் பற்றியவை அல்ல என்றும் சர்வதேச அரசியல் சூழ்ச்சியின் நேரடி விளைவு என முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்தார்.
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்ய மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அம்மான் ஆகியோர் மீது பிரித்தானிய அரசு சமீபத்தில் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து மேற்படி கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
அத்துடன், இந்தத் தடைகள் எந்தவொரு வெளிப்படையான விசாரணை அல்லது சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இல்லை எனவும் முன்னாள் கடற்படைத் தளபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையின் இராணுவ வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவர்களை குறிவைத்து, சர்வதேச அழுத்தத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்பாட்டை இந்த தடை பிரதிபலிப்பதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி கூறினார்.
இப்போது கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வெளிநாட்டு நிறுவனங்கள், இலங்கை பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்டபோது எதுவும் செய்யவில்லை என்பதனையும் முன்னாள் கடற்படைத் தளபதி வலியுறுத்தினார்.
Link : https://namathulk.com