கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரிட்டன் அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியலுக்கான நாடகம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
கிழக்கு தமிழர் கூட்டணியின் கல்குடா தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக விழா கிரானில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா விதித்துள்ள தடை ஓர் அரசியல் நாடகம் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் சிறைச்சாலையில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போது தான் பிரித்தானிய அரசாங்கம் கண்டுபிடித்துள்ளதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
எவ்வாறானதொரு மொக்கு அரசாங்கம் எனவும் பிரித்தானிய அரசாங்கத்தை விநாயகமூர்த்தி முரளிதரன் விமர்சித்திருந்தார்.
Link: https://namathulk.com