யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை திக்கம் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட 13 மில்லியன் ரூபா பெறுமதியான 33 கஞ்சா பொதிகள் இன்று அதிகாலை மீட்கப்பட்டது.
வல்வெட்டித் துறை திக்கம் பகுதியில் கஞ்சா பொதிகள் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில், குறித்த வீட்டை முற்றுகையிட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் வல்வெட்டித் துறை பொலிசாரும் இணைந்து 33 கஞ்சாப் பொதிகளை கைப்பற்றினர்.
சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் வல்வெட்டித் துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com