இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியிருந்தன.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட் டைரஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களை எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ஓட்;டங்களுடனும், அணித்தலைவர் ரகானே 18 ஓட்;டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
குயிட்டன் டி கொக் 97 ஓட்டங்களுடனும் ரகுவன்ஷி 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கவில்லை.
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com