மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் போது கடுமையான மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை இந்த அறிவிப்பு நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுத்தியுள்ளது.
Link : https://namathulk.com