175 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள், இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பாராளுமன்ற அதிகாரிகள் நேற்று இந்த அறிவிப்புகளை ஒப்படைத்தனர்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 175 பேர் மட்டுமே சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Link : https://namathulk.com