நுவரெலியா – நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதி பிளக்பூல் சந்தியில் இன்று காலை ஜீப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
கினிகத்தேன பகுதியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
இதன்போதுஇ குறித்த வண்டியில் பயணித்த மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கான காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com