இலங்கையின் பொருளாதார மீட்சி வேகம் அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் சீர்திருத்தங்கள் பலனளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத்துறையின் பணிப்பாளர் ஜூலி கோசாக் ( julie Kozack ) குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பணவீக்கம் குறைவாகவே உள்ளது.
நிதிப் பக்கத்தில் வருமான வசூல் மேம்பட்டு வருகிறது,
மேலும் சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன.
2024ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தை எட்டியது.
இந்தநிலையில், இரண்டு வருட பொருளாதார பின்னடைவிற்கு பின்னர், 2025ஆம் ஆண்டிலும் இலங்கையில் மீட்சி தொடரும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் மிகவும் சாதகமான முன்னேற்றங்கள் என வொசிங்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளார்.
எனினும், இலங்கையின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படக்கூடியதாகவே உள்ளது என்றும், எனவே பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மை நீடித்து நிலைத்திருப்பதை உறுதிசெய்ய சீர்திருத்த உந்துதல் நிலைத்திருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Link : https://namathulk.com