இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதியிருந்தன.
ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதவில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு 191 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.
Link: https://namathulk.com