சிறார்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பேஸ்புக் மூலம் வெளிநாட்டினருக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள காணாமல் போன மற்றும் சுரண்டுதல்களுக்கு உள்ளாகும் சிறார்களுக்கான தேசிய மையம் (NCMEC), இது தொடர்பாக இலங்கை சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்துடன் அறிக்கையைப் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது.
குறித்த அறிக்கையில் சந்தேகநபரான 20 வயது இளைஞரின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பான அறிக்கையை கோட்டை நீதவானிடம் சமர்பித்த பொலிசார் , சந்தேகநபரின் கையடக்க தொலைபேசியின் பதிவுகள் தொடர்பான ஆவணத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து ராகம பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com