இலங்கையின் பச்சை குத்தும் தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சுக்கள் கூட்டாக இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு சிலோன் டாட்டூ மாநாட்டில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் அபேசிங்க, ஏனைய சேவைகளைப் போலவே, இந்தத் தொழிலை ஒழுங்குபடுத்தி, விதிமுறைகள் அறிவிக்க வேண்டும் என்பதே இலங்கை பச்சை குத்தும் கலைஞர்களின் ஒரே கோரிக்கை என கூறினார்.
தகுதியற்ற சேவை வழங்குநர்களால் தொழில் ஆபத்தில் இருப்பதாக உள்ளூர் பச்சை குத்தும் கலைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“இது கலை, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையாகும் எனவும், இந்தத் துறையில் தற்போது அதிக பணம் சம்பாதிக்கும் கலைஞர்கள் உள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் சுமார் 5000 பச்சை குத்தும் கலைஞர்கள் சேவைகளை வழங்குகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.
Link : https://namathulk.com