பயிர் சேதத்திற்கு காரணமான வன விலங்குகள் குறித்து அண்மையில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயிர் சேதத்திற்கு காரணமான வன விலங்குகள் தொடர்பில் கடந்த 15ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
எனினும் அவ்வாறு கிடைக்கப்பெறும் அறிக்கை முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கையாகக் கருத்திற்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வனஜீவராசிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் வனஜீவராசிகள் தொடர்பான உரிய கணக்கெடுப்புகள் அவசியம் எனவும் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
Link : https://namathulk.com