யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புன்னாலைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் தனது புகையிலைத் தோட்டத்தில், புகையிலைக் கன்றுகளுக்கு இடையே கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளமை பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடியின் உயரம் சுமார் 4 அடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Link: https://namathulk.com