உள்நாட்டு போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால், இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
கருணா மற்றும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தில் பின்வரிசையில் நின்று செயற்பட்டவர்கள் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும் எனவும், இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை தாம் ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல போர்க்களத்தின் முன்னின்று செயற்பட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என உறுதிபட தன்னால் கூறமுடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Link : https://namathulk.com