யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிகண்டி கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட பொதிகளில் 65 கிலோ 825 கிராம் கேரள கஞ்சா காணப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link : https://namathulk.com