பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் நேற்று மாலை 5 மணியிலிருந்து காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த, கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்கள் சிலரால் தொடர்ச்சியாக சங்கத்துக்கு அவதூறு பரப்பும் செயற்பாடு மற்றும் அடாவடிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், மேற்படி நபர்களின் செயற்பாடுகளால் சங்கத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்று நீரியல் வளத்துறை திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் சிவகுமார் நேற்று மாலை பருத்தித்துறையிலிருந்து வருகைதந்தபோது இருவர் அவரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சுப்பர்மடம் பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு மேற்படி விடயம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து, பருத்தித்துறை பொலிசார், சங்கத்தின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற்றதுடன், தாக்குதல் நடத்திய இருவரையும் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான சுப்பர்மடம் கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் முத்துக்குமார் சிவகுமார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
Link: https://namathulk.com