கிளிநொச்சியில், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்.

Ramya
By
1 Min Read
சட்டவிரோத மணல்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று கடற்றொழில் அமைச்சர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் வரவேற்புரையுடனும் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களின் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்படுத்த விசேட திட்டங்கள் வகுத்தல் தொடர்பாகவும் உடனடி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *