கிழக்கு மாகாணத்தை நேசிப்பபவர்கள் தமது கூட்டமைப்பில் இணைந்து கொள்ள முடியும் என பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அத்துடன், மட்டக்களப்பு நகரத்தில் இன்னும் கழிவு முகாமைதுவம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதன்போது, தமது ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களுக்கமைவாக, மட்டகளப்பு நகரம் அழகாக மாற்றப்பட்டது எனவும், அதற்கமைவாக, கல்லடி அழகிய கடற்கரை உருவாக்கப்பட்டதாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் போலியான விடயங்களை முன்வைத்ததோடு, முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாமல் மட்டகளப்பு நகரம் உள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் கூறினார்
Link : https://namathulk.com