ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான கித்சிறி ராஜபக்ச பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட, கென்ட் சாலையில் அமைந்துள்ள நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளர் மற்றும் அவரது மகளை அவமதித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்படி, கித்சிறி ராஜபக்ச இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com