க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படுவது தொடர்பான செய்திகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, உயர்தரப் பரீட்சை முடிவுகள் குறித்து வெளிவந்த ஊடக அறிக்கைகள் தவறானவை என கூறப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
எனவே, பல்வேறு ஊடக தளங்கள் மூலம் பகிரப்படும் தவறான அறிக்கைகளால் மாணவர்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Link : https://namathulk.com