முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு தலைமறைவாக உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபரை 10 இலட்சம் ரூபா மதிப்புள்ள சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்திற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபிளும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com