தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின் தேசிய உப்புத் தொழிற்சாலையை இன்று முதல் மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார்.
‘ரஜ லுணு’ எனும் பெயரில் சமையல் உப்பு அறிமுகப்படுத்தப்படுவதுடன், அந்த தொழிற்சாலை ஊடாக மிகவும் சாதாரண விலையில் சமையல் உப்பு சந்தைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் குறிப்பிட்டார்.
தொழிற்சாலை ஊடாக இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.
Link : https://namathulk.com