இலங்கை ஊடகவியலாளர் நமினி விஜயதாச, புலனாய்வு ஊடகத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும், இலங்கையில் ஊழலை அம்பலப்படுத்துவதற்கு அவரின் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் முகமாக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச துணிச்சலான பெண்கள் விருதைப் பெற்றுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, விஜயதாச தனது ஊடகத்துறையில் தொடர்ந்து தைரியத்தையும் நேர்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு போரில், மனித தாக்கத்தை ஆவணப்படுத்துவதன் மூலமும், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதன் மூலமும் அவர் தனது ஊடகப்பயணத்தை தொடங்கினார்.
அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவரது புலனாய்வுப் பணி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால், 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சர்வதேச துணிச்சலான பெண்கள் விருதானது, தைரியம், வலிமை மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய உலகளாவிய பெண்களை கௌரவிக்கும் முகமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, 18வது ஆண்டுக்கான, சர்வதேச துணிச்சலான பெண்கள் விருது வழங்கும் விழா ஏப்ரல் 8ஆம் திககி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜோனாதன் கிளப்பில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com