இந்த வருட சிறுபோகத்தில் நெல் விவசாயத்திற்கு மட்டுமல்லாது, நெல் வயல்களில் பயிரிடப்படும் பிற பயிர்களுக்கும் உர மானியங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தி பெலியத்தயில் நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அத்துடன், இளம் தொழில்முனைவோர் தொழில் அமைச்சிடம் தாம் பெற்ற சான்றிதழை காண்பித்து கடன் பெற முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், குறித்த கடனை பெறுவதற்கு உத்தரவாதம் தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Link : https://namathulk.com