2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டின் இராணுவ தலைமையிலான அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஏராளமான கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து அதிகமான சடலங்கள் மீட்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரில் உள்நாட்டு போரில் அதிகளவு இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பாரிய மனிதாபிமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது
மியன்மாரில் நேற்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தொடர்ந்து தாய்லாந்திலும் அதன் தாக்கம் நிலைகொண்டது.
இந்நிலையில் தாய்லாந்தில் உடனடியாக அவசர கால நிலையை அந்நாட்டு பிரதமர் சினவத்ரா அறிவித்தார்.
இதேவேளை மியான்மர் மற்றும் தாய்லாந்திற்கு அவசர மனிதாபிமான ஒத்துழைப்புகளை அயல் நாடுகள் வழங்கியுள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிவாரணப் பணிகளை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.
Link : https://namathulk.com