11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – முன்னாள் கடற்படைத் தளபதி மீதான மனுக்களை விசாரிப்பதிலிருந்து விலகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள்.

Ramya
By
1 Min Read
முன்னாள் கடற்படைத் தளபதி

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பான மனுக்களை விசாரிப்பதில் இருந்து இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.

நீதியரசர்கள் திலீப் நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் நேற்று தனிப்பட்ட காரணங்களைக் கூறி மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும், பின்னர் காணாமல் போன 11 இளைஞர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ​​நீதியரச்கள் நவாஸ் மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மனுக்களை நிராகரிப்பதற்கான தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டனர்.

இதன்படி, மனுக்கள் மீதாகன விசாரணை செப்டம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டடுள்ளது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *