இந்தியன் பிரிமியலீக் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற எட்டாவது போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது
சென்னை – சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற சிஎஸ்கே அணித் தலைவர் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஆரம்பித்தனர்
16 பந்துகளில் 32 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சால்ட் ஆட்டமிழந்தார்
5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார்.
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ஓட்டங்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுக்கொண்டது .
197 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி ஆகியோர் களமிறங்கினர்.
இந்த அணியின் தலைவர் ருதுராஜ் ஒருஓட்டங்கள் கூட பெறாத நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது 20 ஓவர் முடிவில் 146 ரன்களுடன் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது.
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியுள்ளது.
கடைசியாக 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com