அமைச்சர்கள் பயன்படுத்தாத பங்களாக்களை மறுபயன்பாடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இது போன்ற பங்களாக்கள் 35 உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு தூதரகங்கள், அமைச்சுக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்த பங்களாக்களை குத்தகைக்கு விட 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை விடுத்துள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகங்கள் முதன்மையாக மாணவர் விடுதிகளாகப் பயன்படுத்த இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
ஒரு சில நீதிபதிகள் உத்தியோகபூர்வ இல்லங்களாக பங்களாக்களை பயன்படுத்த கோரியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பயன்படுத்தப்படாத பங்களாக்களை பொருளாதார ரீதியாக வருவாய் ஈட்டும் வகையில் பயன்படுத்தும் நோக்கில் சிறப்புக் குழுவொன்று ஜனாதிபதியிடம் பரிந்துரைத்ததோடு, அதுதொடர்பிலான அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, பதவியில் இருக்கும் அமைச்சர்கள் இந்த உத்தியோகபூர்வ பங்களாக்களை ஆக்கிரமிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com