பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆறாவது, வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர ஆகியோர் இந்த வார இறுதியில் தாய்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த உச்சிமாநாடு ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாங்காக்கில் ‘வளமான, மீள்தன்மை மற்றும் திறந்த’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும்.
பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் பிரதமர் ஈடுப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com