இந்தோனேசியாவில் இன்று (30) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4 மெக்னிடியுட்டாக பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதேவேளை மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1644 ஆக உயர்ந்துள்ளது.
Link: https://namathulk.com