இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 29வது தலைவராக சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய நேற்று உத்தியோகப்பூர்வமாக பதவியேற்றார்.
பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்க தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் செயலாளரான அமரசூரிய, மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் அனுபவம் வாய்ந்தவராவார்.
அத்துடன், பொதுச் சட்டம், ஒப்பந்த, வணிகம், சொத்து, வரிவிதிப்பு மற்றும் வங்கிச் சட்டம் உள்ளிட்ட பரந்த அளவிலான சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com