உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இதுவரையில் 180 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மார்ச் 20 முதல் மார்ச் 28 வரை இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழ குறிப்பிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் ஒரு வன்முறைச் சம்பவம் தொடர்பான முறைப்பாடாகவும், மீதமுள்ள 179 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதனடிப்படையில், 133 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 47 முறைப்பாடுகள் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Link: