கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை துபாயிலிருந்து நாட்டிற்கு வருகை வந்த சந்தேக நபர், பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சந்தேக நபரிடமிருந்து மொத்தம் 20,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் அக்குரணையைச் சேர்ந்த 36 வயதுடையவர் என பொலிசார் கூறினர்.
சம்பவம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
link :https://namathulk.com