கேகாலை, பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக கேகாலை பொது வைத்தியசாலை வளாகத்தில் சம்பந்தப்பட்ட நபர் விசேட வைத்தியரை தாக்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிசார் கூறினர்.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான வைத்தியர் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
link: https://namathulk.com