க்ளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நகர்ப்புற காடு வளர்ப்பு திட்டத்தின் முதல் கட்டம் இன்று காலை பேலியகொடை களனி பாலத்திற்கு அருகில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், வீதி மேம்பாட்டு ஆணைக்குழு, நகர மேம்பாட்டு ஆணைக்கழு மற்றும் கொழும்பு மாநகர சபை, பொது மற்றும் தனியார் துறைகள் இந்த திட்டத்தில் இணைந்து செயலாற்றுகின்றன.
அதன்படி, பேலியகொடையில் உள்ள நவலோக சுற்றுவட்டத்திற்கும் புதிய களனி பாலத்திற்கும் இடையில் உள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் மரங்கள் நடப்பட்டு, அவ்விடத்தை கவர்ச்சிகரமான நகர்ப்புற வனப்பகுதியாக மாற்றும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தாவரங்களை பராமரிக்கும் பணி பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கப்படடுள்ளது.
அதன்படிஇ பேலியகொடையில் உள்ள களனி பாலத்திற்கு அருகில் நடப்பட்ட மரங்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பும் பேலியகொடையில் உள்ள தர்மவிஜய தம்மப் பள்ளி மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மரம் வளரும்போது அதன் தற்போதைய நிலை மற்றும் பராமரிப்பாளர்கள் பற்றிய தகவல்கள் உட்படஇ,அனைத்து தகவல்களையும் தொடர்ந்து புதுப்பிக்கும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.










link: https://namathulk.com